Connect
To Top

Vimal’s Next movie

துருவங்கள் பதினாறு பாணியில் விமலின் அடுத்த படம்!

மன்னர் வகையறாவை தொடர்ந்து விமலின் அடுத்த படம்!

மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிப்பில் விமல் நடிக்கிறார்!

” பசங்க ” படத்தின் மூலம் அறிமுகமாகி ” களவாணி ”  மூலம்  மக்களின் மனதில்இடம் பிடித்தவர் நடிகர் விமல். இதுவரை 22 படங்கள் இவரது நடிப்பில்வெளிவந்துள்ளது. அவற்றில் களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடிரங்கா, தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் பெரிய வெற்றிபடங்களாக அமைந்தன. பல படங்கள் சுமார் ரகமாக இருந்தாலும்தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை.

திருட்டு விசிடி முன்கூட்டியே வெளிவந்தும் ” மாப்ள சிங்கம் ” திரைப்படம் தமிழகதிரையரங்குகளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்தது.    நல்ல கதையம்சம் கொண்டபடங்களாக இருந்தால் வசூல் சக்கை போடு போடும் என்பதற்கு தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் உதாரணமாகும்.

இவரது நடிப்பில் வெளிவந்த ” காவல் ” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் தமிழக திரையரங்குகள் மூலம் கிடைத்த வசூல் மட்டும் 1.5 கோடி ஆகும்.

இந்நிலையில் சரிந்து விழுந்த தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்தும்வகையில் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் ” மன்னர் வகையறா ” என்றபடத்தை தயாரித்து வருகிறார் விமல்.

தன்னுடைய சொந்த படமாக இருந்தாலும் தனக்கான முக்கியத்துவத்தைகுறைத்துக்கொண்டு ஆனந்தி, பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, வம்சி கிருஷ்ணா, கார்த்திக், நீலிமா ராணி, ஜெய பிரகாஷ், எனநட்சத்திர பட்டாளங்களை உடன் வைத்து கொண்டு பயணம் செய்கிறார்.

இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதி படத்தைமுடிப்பதற்கு நன்கு திட்டமிட்டு டிசம்பர் 12 முதல் படப்பிடிப்பை நடத்தஆயத்தமான நிலையில் வர்தா புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. டிசம்பர் 12 அன்று SKR பொறியியல் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்த இருந்த நிலையில்புயலால் மரங்கள் விழுந்து விட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “மாப்ள சிங்கம்” படத்திற்கு பிறகு “மன்னர் வகையறா” படத்தின்வெளியீட்டிற்கு பிறகே அடுத்த படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்திருந்த நடிகர்விமல் ” மன்னர் வகையறா ” திரைப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள்நடித்து வரும் காட்சிகள் பெருமளவில் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைத்துபடப்பிடிப்பை நடத்த காலதாமதமாகி வருவதால் நடுவில் ஒரு சிறிய படத்தைமுடித்து விட திட்டமிட்டுள்ளார்.

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ” துருவங்கள் பதினாறு ” பாணியில் குறும்பட இயக்குனர் ‘தரண்’ சொன்ன கதை பிடித்து போனதால் அந்தகதைக்கு ஓகே சொல்லியவர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேதி கொடுத்துள்ளார்.

” துருவங்கள் பதினாறு ” படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய ஜாக்ஸ்மீண்டும் இந்த திரில்லர் படத்தில் கலக்க உள்ளார். நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.

இந்த படத்தை மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.

மார்ச் முதல் வாரத்தில் படத்தை தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் படத்தைவெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

More in Uncategorized

 • ‘Vivegam’ sets new record

  ‘Vivegam’, the upcoming release of Ajith, has not just raised expectations in Kollywood, but also in the neighbourin Tollywood. The film...

  Movie NaveenJuly 21, 2017
 • Tejasree Actress Gallery

  Movie NaveenJuly 19, 2017
 • As more ministers slam Kamal, actor finds support from Stalin, OPS

  More ministers have joined the list of members of the Tamil Nadu cabinet slamming Kamal Haasan, for the latter’s criticism that...

  Movie NaveenJuly 18, 2017
 • Veethikku Vandhu Poradu tittle released by Cameraman Vettri

  “வீதிக்கு வந்து போராடு“ வீரம், வேதாளம், வேகம்,  படத்தின் கேமராமேன் வெற்றி  “வீதிக்குவந்து போராடு” தலைப்பை வெளியிட்டார்  நாட்டு நடப்பை பிரதிபலிக்கும்  படமாக ‘வீதிக்கு வந்து போராடு‘உருவாகிறது. இன்று நம் நாட்டில் நாளொரு பிரச்சினை பொழுதொரு போராட்டம் என்றுமாறி வருகிறது. எதையும் போராடியே பெற வேண்டியிருக்கிறது  போராடவேண்டியவை நிறையவே இருக்கின்றன.  ஆனால் வீதிக்கு வந்து போராடுவது என்றால் தயங்குகிறார்கள். பல பிரச்சினைகளை வீதியில் இறங்கிப் போராடாமல்  தீர்க்க முடியாததுஎன்பது தான் நம் நாட்டு நிலையாக உள்ளது. இதை மையமாக வைத்துஉருவாகிற படம் தான் ‘வீதிக்கு வந்து போராடு’. இப்படத்தை அறிமுக இயக்குநர் விக்கி வைத்தியநாதன் இயக்குகிறார்.வி.பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு வி. முரளி ஸ்ரீதர் , இசை  :வசந்தராஜ் சிங்காரம் . எடிட்டிங் ராஜ் – வேல் , வசனம் பாடல்கள்கார்த்திகேயன் .ஜெ  . இணைத் தயாரிப்பு சக்தி சரவணன் ,

  Movie NaveenJuly 18, 2017
 • Radikaa’s plea dismissed by HC with costs

  The Madras High Court has dismissed with costs of Rs two lakh, applications filed by Radikaa Sarathkumar for vacating the court’s...

  Movie NaveenJuly 18, 2017
 • Kalavu Thozhirchalai First Look Poster

  Wall of mykollywood.com Kalavu Thozhirchalai First Look Poster Cast Vamsi Rrishna, Kalanjiyam, Kushi, Nataraj Pandiyan, Kadhir           Director: T Krishnasamy

  Movie NaveenJuly 17, 2017
 • Sri Sivakumar educational and charitable trust 38th year Felicitation Ceremony!

  ஸ்ரீ சிவகுமார் அறக்கட்டளையின் 38வது வருட விழா இன்று நடைபெற்றது இதில் நடிகர் , ஓவியர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்....

  Movie NaveenJuly 17, 2017
 • Savarikkadu Movie Gallery & Preview

  ஜூ லை 21 ம் தேதி வெளியாகும் “ சவரிக்காடு “ ஆன்னை தெரசா பிலிம்ஸ் சார்பில் M.N.கிருஷ்ணகுமார் தயாரிப்பில் G.முரளி இணை தயாரிப்பில் உருவாகி உள்ள படம்...

  Movie NaveenJuly 13, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook