Connect
To Top

Music Director C.Sathya Interview

C Sathya

Flickr Album Gallery Powered By: Weblizar

எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா – 2′ போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா. இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். எண்ணிக்கை என்ன ரொம்ப கம்மியா இருக்குன்னு நினைக்குறீங்களா? அதுக்கான பதிலையும் அவரே சொல்லிட்டாருன்னா பாருங்களேன்.

சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர் தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது.

உங்களுக்குள்ள நல்ல திறமை இருக்கே டக்கு டக்குன்னு அடுத்தடுத்த படங்களை புக் செஞ்சிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியது என்ற கேள்விக்கும் அற்புதமான பதிலை தருகிறார் சத்யா.

நீங்க சொல்றதும் சரிதான் சார், கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் எனக்கு வந்துச்சு, படத்துல கமிட் ஆகுறது விஷயமில்ல, ஆனால் சரியான நேரத்துல பாடல்களும், பின்னணி இசையும் என்னால தர முடியுமான்னு ஒரு யோசனை வந்துட்டே இருந்தது. இதனால் பல படங்களை நான் தவிர்த்துவிட்டேன்.

ஆனா இனி என்னுடைய வேலையை இன்னும் வேகமாக்கியுள்ளேன். இதனால் பெரிய ஹிரோக்களின் படங்களுக்கு சரியான நேரத்தில் என்னால் அவுட்புட் தர முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் சத்யா.

தற்போது விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி நடித்துக் கொண்டிருக்கும் ”பக்கா” படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பெரும்பாலான பகுதி திருவிழா செட்டப் இருப்பது போலவே இருக்கும். இதுவரைக்கும் பல கரகாட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் பார்த்திருப்பீங்க. ஆனால் பக்கா படத்தில் ஒரு கரகாட்ட பாடல் இருக்கு அது முற்றிலும் மாறுபட்ட புதுவித அனுபவத்தை தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சத்யா.

இத்துடன் அசுரகுலம், பயமா இருக்கு ஆகிய படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்கிறார் மகிழ்ச்சியுடன்.

“பயமா இருக்கு” படத்தில் வரும் மயிலு பாடல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி முதல் முறையாக அந்தோனிதாஸ் காதல் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in Interview

 • “Itly” -Kovai Sarala Interview

               “எனக்கு நானே குழந்தை !” – கோவைசரளா ! இட்லி திரைப்படத்தை பற்றிய சிறப்பு பேட்டி !! நிருபர்: உங்களுக்கு...

  Movie NaveenOctober 19, 2017
 • Puriyatha Puthir Director Ranjith Jeyakod interview

  “Puriyatha Puthir” ‘Puriyaadha Pudhir’ starring ‘Makkal Selvan’ Vijay Sethupathy, Gayathri, Mahima Nambiar and directed by debutant director Ranjith Jeyakodi, has hit...

  Movie NaveenSeptember 3, 2017
 • 12.12.1950 movie director Kabali Selvah Interview

   “12.12.1950” ’12-12-1950′ a fan biopic as described by the core team is  written, directed and acted by Kabali Selvah and is...

  Movie NaveenAugust 22, 2017
 • Director Azhagam Perumal Interview

   “Director Azhagam Perumal” One of the main factors for any movie to reach the audience effectively and become a hit is...

  Movie NaveenAugust 18, 2017
 • Dance Master Siva Rock Sankar Interview

  சிலாக்கி டும்மா டான்ஸ் விஜய் சாரின் மகனுக்கு மிகவும் பிடிக்குமாம்   – நடன இயக்குநர்  சிவ ராக் சங்கர்  Interview video Link : https://drive.google.com/file/ d/...

  Movie NaveenAugust 18, 2017
 • JSK turns as actor through Taramani

  நடிகராக அவதாரமெடுத்த தரமணி தயாரிப்பாளர் ஜேஎஸ்கே! தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார். இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஆரோகணம் படம் மூலம்...

  Movie NaveenAugust 14, 2017
 • Stunt artist from Hollywood, Serge Crozon Cazin Interview

  “Vivegam” Action extravaganzas are a quintessential part of any international Spy thriller. Only the best of actors with valour and necessary...

  Movie NaveenAugust 6, 2017
 • Tharamani Hero Vasanth Ravi Interview

   “Taramani” Hero Vasanth Ravi For any actor the debut movie will be such a huge learning curve. And when the shooting...

  Movie NaveenAugust 2, 2017
 • Rubaai movie hero Kishore Ravichandren Interview

   மூட்டை தூக்கிய எம்.பி.ஏ பட்டதாரி   எல்லோருக்கும் தெரிந்தவர்களாலும் எல்லாம் தெரிந்தவர்களாலும் தேர்வு செய்யப் படுபவர்கள் என்றுமே தோற்பதில்லை. அப்படித்தான் ரூபாய் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமான கிஷோர் ரவிச்சந்திரனும்....

  Movie NaveenJuly 21, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook