’கதிர்’ பட தயாரிப்பாளர் விமலா ராஜநாயகத்திற்கு சாதனையாளர் விருது!

By
‘கதிர்’ திரைப்பட தயாரிப்பாளரும், சமூக சேவகருமான விமலா ராஜநாயகத்திற்கு அஜந்தா பைன் ஆர்ட்ஸ் சார்பில் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் விமலா ராஜநாயகம், ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். மேலும், திரைப்படங்கள் வாயிலாக சமூகத்திற்கு நல்ல விஷயங்களை சொல்வதற்காக ‘கதிர்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வரும் விமலா ராஜநாயகத்தை கெளரவிக்கும் வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த அஜந்தா பைன் ஆர்ட்ஸ்  அவருக்கு சாதனையாளர் விருது வழங்கி கெளரவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் கவிஞர் கண்ணதாசனின் அண்ணன் மருமகளும், பிரபல திரைப்பட தயாரிப்பாளருமான ஜெயந்தி ஏ.எல்.எஸ்.கண்ணப்பன், கஸ்டம்ஸின் ஜாய்ண்ட் கமிஷ்னர் கோமதி ஐ.ஆர்.எஸ் மற்றும் திரைப்பட மற்றும் டிவி சீரியல் நடிகை நீலிமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு, விமலா ராஜநாயகத்திற்கு சாதனை பெண்மணி விருது வழங்கினார்கள்.

You may also like

Hot News

post-image
Kollywood News Press Meet

Baskar Oru Rascal Press Meet Event Stills & News

நடிகர் அரவிந்த்சாமி நடிக்கும் “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது!   இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாஸ்கர் ஒரு ராஸ்கல்” படத்தில் கதாநாயகனாக அரவிந்த்சாமி  நடிக்கிறார்....
Read More
post-image
Kollywood News

Barath’s Kalidoss in final stage

அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...
Read More
Bitnami