It’s a wrap up for Rio Raj-Ramya Nambeesan film

456

Rio Raj-Ramya Nambeesan film

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

It’s evident the entire team of Rio Raj-Ramya Nambeesan starrer directed by Badri Venkatesh has been transfused with high level energies. Yup! The crew has been surprising us with back to back announcements on completing the schedules within short span of time. And now, it’s a wrap up with entire shooting. The news comes straight from the desk of director Badri Venkatesh, who feels very much exhilarated and cheerful about the way the project has been completed.

Badri Venkatesh, director of the film says, “The entire process of shooting this film has been a great experience. The way we complemented and encouraged each other enabled us to wrap up the shoot at this pace. It’s been a phenomenal experience to all of us as we shot across some of the beautiful locations. Apart from Chennai, we have filmed this project in Vagamon, Idukki, Gangtok and Kupup located near the Chinese border. We are now immediately kick-starting the Post-Production work and will soon revealing the film’s title along with first look.”

It is noteworthy that the team has accomplished with some commendable tasks of shooting a particular schedule with 125 technicians. The film has lots of reasons to keep us brimmed with good expectations for the presence of talented artistes far-famed for their humorous spell. This includes M.S. Bhaskar, Santhana Bharathi, Bala Saravanan, Rekha, Marimuthu, Viji Chandrashekar, Robo Shankar, Munishkant, Aadukalam Narain, ‘Pazhaya Joke’ Thangadurai, Madurai Sujatha and many others.

Produced by Rajesh Kumar and L Sinthan for Positive Print Studios, the film has musical score by Yuvan Shankar Raja and cinematography handled by B. Rajasekar. The others in the technical crew are – Sam RDX (Editing), Saravanan (Art), Kalyan (Choreography), Stunner Sam (Action), AC Karunamoorthy (Story) and RK (Dialogues).

இறுதிக்கட்டத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படம் !

திரையின் மீது காதலும் அணுகும் வேலையின் மீது நேர்மையும் கொண்ட படக்குழுவிற்கு உதாரணமாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன் நடிக்கும் திரைப்படத்தின் படக்குழுவை சொல்லலாம். படம் அறிவிக்கப்பட்ட வெகு குறுகிய காலத்தில் படப்பிடிப்பை முடித்து ஆச்சர்யம் தந்துள்ளது படக்குழு. மிக குறுகிய காலத்தில் படம் மிக அழகாக உருவாகி வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கிறார் இயக்குநர் பத்ரி வெங்கடேஷ்.

படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டதாவது…

இப்படத்தின் படப்பிடிப்பு மறக்க முடியாத பெரிய அனுபவம். ஒருவருக்கொருவர் தட்டிக்கொடுத்து முழு ஈடுபாட்டுடன் உழைத்த மொத்த படக்குழுவும் தான் இன்று படம் இவ்வளவு அழகாக உருவாகி நிற்க காரணம். பல அற்புதமான இடங்களில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். சென்னை மட்டுமல்லாமல் கேரளாவில் இடுக்கி, வேகமன் மற்றும் சைனாவில் கேங்டாக், குபுப் ஆகிய இடங்களில் ஷூட்டிங் நடத்தியுள்ளோம். படப்பிடிப்பு முடிந்த நிலையில் உடனடியாக போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளை இப்போது ஆரம்பித்துள்ளோம். விரைவில் படத்தின் தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடவுள்ளோம் என்றார்.

இப்படம் ரசிகர்களை ஈர்க்கும் குறிப்பிடதக்க பல அம்சங்கங்களை கொண்டிருக்கிறது. படத்தின் ஒரு பகுதி 125 தொழிற்நுட்ப கலைஞர்களின் உழைப்பில் உருவாகியுள்ளது. இதுவரை தமிழ் சினிமா கண்டிராத லொகேஷன்களில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் எம். எஸ். பாஸ்கர், சந்தான பாரதி, ரேகா, பாலசரவணன், மாரிமுத்து, விஜி சந்திரசேகர், ரோபோ சங்கர், முனீஷ்காந்த், ஆடுகளம் நரேன், பழைய ஜோக் தங்க துரை, மதுரை சுஜாதா என தமிழின் முக்கியமான கலைஞர்கள் இப்படத்தில் பங்குகொண்டுள்ளார்கள்.

ராஜேஷ் குமார் மற்றும் L. சிந்தன் இணைந்து Positive Print Studios சார்பில் இப்படத்தை தயாரிக்கிறார்கள். இளைஞர்களின் ஆதர்ஷம் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். B.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷாம் RDX படத்தொகுப்பு செய்ய, சரவணன் கலை இயக்கம் செய்துள்ளார். நடன அமைப்பை கல்யாண் அமைக்க, ஸ்டன்னர் ஷாம் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். AC கருணாமூர்த்தி கதை எழுத RK வசனம் எழுதியுள்ளார்.

Leave A Reply

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com