Connect
To Top

MGR Grandson’s Odu Kumaru Odu Movie Preview

கள்ளக்காதல் குற்றங்களை மையமாக வைத்து உருவாகும் பரபர த்ரில்லர் ’ஓடு குமார் ஓடு’

IMG-20160901-WA0020

சமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை
பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப்
பிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம் தென்படுகின்றன. ’இன்றைய
கள்ளக்காதல் கொலைகள்’ என்று தனி பக்கமே கொடுக்கும் அளவுக்கு கணவன் அல்லது
மனைவியின் தகாத உறவின் விளைவால் நடக்கும் கொலை, குற்றங்கள் ஏராளம்.

இந்த சூழ்நிலையில், கணவன் மனைவிக்கிடையேயான அன்னியோன்யத்தையும், அந்த
அன்னியோன்யம் கெடுவதால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லும் ஒரு
விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது ’ஓடு குமார் ஓடு’ படம்.

ஐடி துறையில் வேலை பார்க்கும் ஒரு தம்பதி அழகான ஆதர்ஸ தம்பதிகளாக
இருக்கும் குடும்பத்தில் திடீரென ஒரு புயல் உருவாகி, மனைவியை விவாகரத்து
கேட்க வைக்கிறது. குடும்பம் தான் முக்கியம் என நினைக்கும் கணவன், மனைவி
எவ்வளவோ வற்புறுத்தியும் விவாகரத்து தர மறுக்கிறான். ஒரு காரசார
வாக்குவாதத்துக்கும் மறுநாள் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள் மனைவி. பழி
கணவன் மீது விழுகிறது. அந்த பழியில் இருந்து மீண்டு வந்தானா அந்த அப்பாவி
கணவன்? உண்மையில் மனைவியை கொலை செய்தது யார்? இதனை விறுவிறுப்பான
திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சிவசங்கர் மணி.

சென்னை டூ பெங்களூரு, பெங்களூரு டூ கோவா என பயணத்திலேயே நடக்கிறது
இந்தக் கதை. இந்த படத்தில் நாயகனாக புரட்சித்தலைவர், பொன்மன செம்மல்
எம்ஜிஆர் அவர்களின் பேரன் ராமச்சந்திரன் நடிக்கிறார். கதாநாயகிகளாக
புதுமுகம் இரண்டு பேர் அறிமுகமாகிறார்கள். செப்டம்பர் இரண்டாம் வாரம்

ராமாவரம் தோட்டத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. தொடர்ந்து பெங்களூரு,
கோவா நெடுஞ்சாலைகளில் நடைபெறுகிறது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த 30 ஆம் தேதி ராமாவரத்தில் நடிகர்
விஜய்சேதுபதியால் வெளியிடப்பட்டது. இந்த படத்தை கதை, திரைக்கதை, வசனம்
எழுதி இயக்குகிறார் சிவசங்கர் மணி. ஒளிப்பதிவு – விவேக் ஆண்டனி.
எடிட்டிங் – வெங்கடேஷ். இசை – அமர் கீர்த்தி.

இந்தப் படத்தை எம்.குமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு – ரியல் தேவ்,
ஸ்டான்லி.எஸ்.ஆர்.கே. ஜோய், ஏ.மணிகண்டன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Kollywood News

 • Vishal’s real action at Chidambaram

  இன்று 23.02.2017 கடலூர் மாவட்டம்,சிதம்பரம் நகராட்சி பரங்கிப்படை ஊராட்சியில் ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சியில் நடிகர் விஷால் மற்றும் தேவி அறக்கட்டளையும், ஊர் பொது மக்களுடன் சேர்த்து அந்த கிராமத்து...

  Movie NaveenFebruary 24, 2017
 • Padaiveeran First Look Posters & Movie Preview

  இவோக் தயாரிக்கும் பிரபல பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் “படைவீரன்” தேனி மாவட்டத்தில் உயிர்ப்போடு வாழும் ஒரு கிராமமும்…அதன் மண்சார்ந்த மனிதர்களின் வாழ்க்கையுமாக உருவாகும் படம் “படைவீரன்”....

  Movie NaveenFebruary 24, 2017
 • 4G First Look Posters

   

  Movie NaveenFebruary 23, 2017
 • Actress Simran to join the cast of Director Selva’s next venture..!!

  Magic Box Production house Ganesh presents “Magic Box Production Number 3”, directed by Selva with Arvindh Swami and Rithika Singh playing...

  Movie NaveenFebruary 23, 2017
 • Nadigar Sangam Statement – Reg. Bhavana & Varalaxmi issues

   22.02.2017                            Nadigar Sangam Statement        ...

  Movie NaveenFebruary 22, 2017
 • Samantha is super thrilled

  Samantha is happy about being part of ‘Aaranya Kaandam’ director Thiagarajan Kumararaja’s upcoming film, which has Vijay Sethupathi and Fahadh Faasil...

  Movie NaveenFebruary 22, 2017
 • Anirudh sings for Simbu

  Anirudh and Simbu are best pals and were even caught in the ‘Beep song’ controversy. And now, the former has crooned...

  Movie NaveenFebruary 22, 2017
 • ‘Siruthai’ Siva reveals secrets about ‘Vivegam’

  Director Siva was the chief guest at a recent college event, in which he spilled the beans on one of the...

  Movie NaveenFebruary 22, 2017
 • ‘Harischandra’ director Mitradas dies at 103

  Filmmaker Antony Mitradas, who made films in Tamil, Malayalam and Sinhalese and served in the Army during the Second World War,...

  Movie NaveenFebruary 22, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook