Connect
To Top

Merlin Teaser & Promo song Launch Event stills & News

Merlin Teaser & Promo Song Launch

Flickr Album Gallery Powered By: Weblizar

பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைய இயக்குனர்கள் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் – இயக்குனர் வசந்தபாலன்

‘பச்சை என்கிற காத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் கீரா நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கியுள்ள படம் ‘மெர்லின்’. ஜே.எஸ்.பி. பிலிம்ஸ் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு பிரியனும் கதாநாயகியாக ஒரு சில தெலுங்கு மற்றும் கன்ண்ட படங்களில் நடித்துள்ள அஸ்வினியும் நடித்துள்ளனர். இவர்களுடன் தங்கர் பச்சான், மனோபாலா, மு.களஞ்சியம், ‘ஆடுகளம்’ முருகதாஸ், ‘லொள்ளு சபா’ ஜீவா, சிங்கம் புலி, ‘கயல்’ தேவராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். அட்டகத்தி தினேஷ் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ சாங் வெளியீட்டு விழா நேற்று (செப்டம்பர் 3) நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், தங்கர்பச்சான், வசந்த பாலன், மகிழ் திருமேனி, மீரா கதிரவன், தாமிரா நடிகர்கள் ஆரி, சிங்கம் புலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் வசந்த பாலன், “ நண்பன் நா. முத்துகுமார் இறந்த பின்னர் சிரிக்க மறந்திருந்தேன் சிங்கம் புலியின்  பேச்சு  என்னை சிரிக்க வைத்தது. மிக மோசமான காலக்கட்டத்தில் இன்று நாம் நின்று கொண்டிருக்கிறோம். ஒரு தலைக்காதலால் பெண்களை கொலை செய்கிறார்கள். இந்த சூழலில் இயக்குனர்கள் பொறுப்பாக இருக்க வேண்டிய காலத்தின் கட்டாயம்.” என்றார்

இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் ரஞ்சித்,

“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சினிமா வந்து அந்த காலகட்டத்தை புரட்டிப்போடும். பராசக்தியில் அதை பார்த்தோம். இப்போது பேய் படங்கள் ஒரு பக்கம் ஒடினாலும் காக்கா முட்டை, ஜோக்கர் மாதிரியான சமூக முரண்பாடுகளை பேசும் படங்களும் மக்களை சென்று சேருகிறது.

மெர்லின் படத்தின் டீஸர் மற்றும் ப்ரோமோ பாடலை பார்த்தேன். பிரமாதமாக வந்திருக்கிறது. மற்ற பேய் படங்களை காட்டிலும் மெர்லின் வித்தியாசமாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

மேலும் விழாவில் கலந்துகொண்ட இயக்குநர்கள் தங்கர் பச்சான், தமிரா, மகிழ் திருமேனி உட்பட அனைவரும் “மெர்லின் படம் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்பதற்கு  இப்படத்தின் டீஸரும், ப்ரோமோ சாங்கும் சான்றாக அமைந்துள்ளது ” என்று பாராட்டு தெரிவித்தனர்.

More in Trailer Launch

 • Antony Movie, First Look, Single Track, Teaser Released by Pa Ranjith

  இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம்தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி‘ . அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளம் புதுமுகங்களை...

  Movie NaveenNovember 9, 2017
 • “Nenjil Thunivirunthal” Trailer Launch News, Stills & Technician List

  “தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன்.” – இயக்குநர் சுசீந்திரன் பேச்சு  அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில்...

  Movie NaveenOctober 24, 2017
 • ‘Idly’ movie Teaser released by Karthi

  அப்பு மூவீஸ் தயாரிப்பில் இயக்குநர் வித்யாதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ இட்லி “. “ இட்லி “ படத்தின் டீசரை நடிகர் கார்த்தி வெளியிட்டார் இப்படத்தில் சரண்யா...

  Movie NaveenOctober 4, 2017
 • Dhruva Natchathiram – Official Teaser

  Movie NaveenOctober 3, 2017
 • Thupparivaalan Trailer Laungh Event stills & News

  துப்பறிவாளன் திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சங்க தலைவர் , நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால் ,...

  Movie NaveenJuly 20, 2017
 • Arjun marks an incredible milestone with his 150th film – Nibunan

   Like his mythological namesake, this man is youthful, resourceful, extremely talented, and versatile. But if one were to believe mythological stories,...

  Movie NaveenMay 14, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook