Connect
To Top

R S Infotainment’s next has earned Superstar Rajnikanth’s film title.

Elred Kumar the producer with a vision to provide films of various content to the audience has a firm belief on versatility. This intention is proved admirably in his lineup of films. If it was the political satire Ko 2 early this year, it is going to be Kavalai vendam a breezy romantic comedy,  and this is followed by “Veera” an action comedy to be released on the last leg of this year.
Starring Krishna, Karuna and Iswarya Menon, the film Veera directed by Rajaram has Thambi Ramaiah, Radharavi, Motta Rajendran, Yogi Babu and Charandeep in the pivotal roles. The film Veera is well built with a bunch of talented technicians that includes Music Director Leon James, Story, Screenplay and Dialogue writer Bhagyam Shangar, Art Director Senthil Ragavan and Co-Producer V.Manikandan.
Director Rajaram has sketched out an absolute entertainer that is sure to attract audience of all class. Krishna who had mapped his commercial presence with “Yaamirukka Bayamey” produced under our banner is back with us and we are confident that we will identify each other as lucky mascots mutually. Iswarya menon a popular model in the advertising world is the heroine of our movie. Karuna who had been proving himself as an alternative to many popular names in a very short period, is playing a very prominent role in Veera that will remain in the audience’s mind for a long time. It is to be noted Karuna also played a major part in the success of “Yaamirukka Bayamey” and we are glad to be together again.
We are indeed very proud to have a popular title of Rajini sir for our film. The positive vibration the title gives us makes us realize the importance of that great man’s presence. At this juncture we would like to thank and pay our respects to the departed stalwart Panju Arunachalam sir for giving this title.’ said producer Elred Kumar in a humble tone.

தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் அடுத்த படத்திற்கு சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த்தின்  பட தலைப்பு

ரசிகர்கள் எந்த மாதிரியான கதைகளை விரும்புகிறார்கள், அவர்களின் ரசனை என்ன என்பதை நன்கு ஆராய்ந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்வது தான் ஒரு தயாரிப்பாளரின் தலையாய கடமை. அந்த வகையில் ஒரு தயாரிப்பாளராக தனது பணியை சிறப்பாகவும், செம்மையாகவும் செய்து வருகிறார் ஆர்.எஸ்.இன்போடைன்மெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர் எல்ரெட் குமார். இவர் தயாரிப்பில் வெளியான ‘கோ 2’ ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளை பெற, தற்போது  இவர் தயாரித்து விரைவில் வெளியாக  இருக்கும் ‘கவலை வேண்டாம்’ படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி தரம் வாய்ந்த படங்கள் எல்ரெட் குமாரின் தயாரிப்பில் வரிசை கட்டி நிற்க, அடுத்து இவர் தயாரித்து இந்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘வீரா’.
அதிரடி கலந்த நகைச்சுவை படமாக உருவாக இருக்கும் இந்த ‘வீரா’ படத்தை ராஜாராம் இயக்க, கிருஷ்ணா, கருணா மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர்  முன்னணி கதாப்பாத்திரங்களிலும், தம்பி ராமையா, ராதாரவி, மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு மற்றும் சரண்தீப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும்  நடிக்க உள்ளனர். இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், பாக்கியம் ஷங்கர் (கதை, திரைக்கதை , வசனம்), கலை இயக்குனர் செந்தில் ராகவன் மற்றும் இணை தயாரிப்பாளர் வி. மணிகண்டன் என வலுவான கலைஞர்கள் இந்த ‘வீரா’ படத்தில் பணியாற்ற இருப்பது மேலும் சிறப்பு.
“நல்ல தரம்  வாய்ந்த கதை களம் தான் ஒரு திரைப்படத்தின் முழுமையான வெற்றியை நிர்ணயிக்கும். அப்படி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய ஒரு கதை களத்தை தேடி கண்டுபிடித்திருக்கிறார் இயக்குனர் ராஜாராம். நாங்கள் தயாரித்த ‘யாமிருக்க பயமே’ படத்தின் மூலம் கமர்ஷியல் ஹீரோவாக உருவெடுத்த நடிகர் கிருஷ்ணாவோடு நாங்கள் மீண்டும் இந்த ‘வீரா’ படத்திற்காக கைக்கோர்த்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் கூட்டணி ஒரு அதிர்ஷ்ட கூட்டணி என்று கூட சொல்லலாம்… விளம்பர பட உலகில் சிறந்த மாடலாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனன் இந்த  ‘வீரா’ படத்தில்  கதாநாயகியாக நடிக்கிறார். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளி குவிக்கும் கருணா, இந்த வீரா படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். நிச்சயம் அவருடைய கதாப்பாத்திரமானது ரசிகர்களின் ஆழ்மனதில் பதியுமாறு இருக்கும் என்பதை நான் உறுதியாகவே சொல்வேன். ‘யாமிருக்க பயமே’ படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக செயல்பட்ட கருணாவோடு நாங்கள் மீண்டும் இந்த ‘வீரா படத்திற்காக இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது…
ரஜினி  சாரின்  பட தலைப்பை எங்கள் படத்திற்கு வைத்திருப்பது எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் பெருமை…இந்த தலைப்பின் மூலம் அந்த சிறந்த மனிதரின் முக்கியத்துவத்தை நாங்கள் உணருகிறோம்..’வீரா’ என்னும்  தலைப்பை வழங்கியவர் மறைந்த பஞ்சு அருணாச்சலம் சார் தான்…தமிழ் திரையுலகின் மிக பெரிய ஜாம்பவானாக கருதப்படும் பஞ்சு  அருணாச்சலம் சாருக்கு இந்த தருணத்தில் எங்களின் மரியாதையை செலுத்த கடமை பட்டிருக்கிறோம்…” என்று கூறினார்  தயாரிப்பாளர் எல்ரெட் குமார்.

More in Kollywood News

  • Silent Agitation by Nadigar Sangam on Jan.20th regarding Jullikattu

    வருகிற 2௦ஆம் தேதி ஜல்லிக்கட்டுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் மௌன அறவழி போராட்டம் !! இந்தியா பல மொழி கலாச்சாரங்கள் கொண்ட தேசம் ! இங்கு ஒவ்வொரு...

    Movie NaveenJanuary 18, 2017
  • Film industry starts year long MGR centenary celebrations

    Key bodies of Tamil film industry came together on Tuesday evening to celebrate the birth centenary of matinee idol turned politician...

    Movie NaveenJanuary 18, 2017
  • Statement from Legendary Actor Siva Kumar Regarding Tallikattu

    கம்பீரத்துக்கும் , அழகுக்கும் பெயர் பெற்ற காங்கயம் காளைகள், நாட்டுப்புற மாடுகள்,தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம். குழந்தைகளைப் போல் அன்பு காட்டி அவற்றை வளர்த்து,பராமரித்து 2500 ஆண்டுகளுக்கும் மேலாக, மாடு...

    Movie NaveenJanuary 18, 2017
  • Statement from Raghava Lawrence regarding Jallikattu

              வீரம் செறிந்தவன் தமிழன்  ராகவா லாரன்ஸ் மேற்கத்திய கலாச்சார விளையாட்டுக்கள் நம் மக்களின் பொழுது போக்குக்கு மட்டுமே சிறந்தது. அனால் நம் ஜல்லிக்கட்டு என்பது ஆண்மைக்கும்,...

    Movie NaveenJanuary 18, 2017
  • MGR 100 – Video by Director Perarasu

    எம்.ஜி.ஆரின் சாதனைகளை வீடியோ வடிவில் உருவாக்கி வெளியிடுகிறார் இயக்குனர் பேரரசு 1917ம் வருடம் ஜனவரி 17ம் தேதி பிறந்த மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பவர் மக்களால் ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்றும்,...

    Movie NaveenJanuary 18, 2017
  • Suriya’s ‘S3’ is ‘C3’ now

    Suriya’s ‘S3’ has undergone a title change. The film directed by Hari, which is the third instalment of ‘Singam’ series, will...

    Movie NaveenJanuary 18, 2017
  • Statement from Suriya regarding Jallikattu

    Movie NaveenJanuary 17, 2017
  • Sarath’s comments against Rajini trigger protests by Superstar fans

    Fans of Superstar Rajinikanth took to protests, after Sarathkumar slammed the top actor for his comments that Tamil Nadu is currently...

    Movie NaveenJanuary 17, 2017
  • After Trisha, Vishal too walks out of Twitter

    Following a sea of messages abusing them over their alleged stand against Jallikattu, Vishal and Trisha have deleted their respective Twitter...

    Movie NaveenJanuary 17, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook