Connect
To Top

Stunt Master Maheshbabu -Interview

%e2%80%aa91-99411-73673%e2%80%ac-20150301_071416-1 dsc_0008 mahesh-master

எதார்த்தமான சண்டைக்காட்சிகள் மூலம் இயக்குநர்களை கவரும் மகேஷ் மாஸ்டர்

திரைப்படங்களில் வரும் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் ஹீரோக்கள் நடித்தாலும், அந்த ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்து ரசிகர்கள் பாராட்டும் வகையில் படமாக்குபவர்கள் சண்டைப்பயிற்சி இயக்குநர்களே. சினிமாவில் உள்ள பல துறைகளில் முக்கியமான துறையாக ஆக்‌ஷன் இருந்தாலும், அந்த கலைஞர்கள் என்னவோ கவனிக்கப்படுவதில்லை. இருந்தாலும், தங்களது உயிரைக் கொடுத்து படத்திற்காக உழைக்கும் இவர்களில் சமீபத்திய வரவாக, தனது ஒரிஜினலான ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் கோடம்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் மகேஷ் மாஸ்டர்.
ஆக்‌ஷன் கலைஞராக சுமார் 500 க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ள மகேஷ் மாஸ்டர், ஹார்ஸ் பாபு, சூப்பர் சுப்பராயன், விக்ரம் தர்மா, கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன் என்று பல ஆக்‌ஷன் இயக்குநர்களிடம் உதவியாளராக பணியாற்றி, தற்போது ஆக்‌ஷன் இயக்குநராக உயர்ந்துள்ளார்.
‘செம்பட்டை’, ‘கலியுகம்’, ‘பர்மா’, ‘வில் அம்பு’, ‘மெட்ரோ’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் ஆக்‌ஷன் இயக்குநராக பணியாற்றிய இவர் தெலுங்கில் ‘ரைட் ரைட்’, மலையாளத்தில் ‘ஆட்னரி’ ஆகிய படங்களுக்கும் ஆக்‌ஷன் அமைத்துள்ளார். இவரது சமீபத்திய வரவான ‘மெட்ரோ’ ஆக்‌ஷன் காட்சிகளுக்காக பிரத்யேகமாக பாராட்டப்பட்டது.
சைன் பறிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ‘மெட்ரோ’ படத்தில் இடம்பெற்ற அனைத்து ஆக்‌ஷன் மற்றும் சேசிங் காட்சிகள் ரியலாக இருந்தது மட்டும் இன்றி, பார்த்தவர்களை மிரள வைக்கும் அளவுக்கும் இருந்தது. இதையடுத்து, வாய்ப்புகள் பலவற்றை பெற்று வரும் மகேஷின் எதார்த்தமான சண்டைக்காட்சிகளைப் பார்த்து இயக்குநர்கள் பலர் பாராட்டியதோடு வாய்ப்புகளையும் வழங்கி வருகிறார்கள்.
இயக்குநர்கள் சண்டைக்காட்சிகளுக்கான சூழலை சொன்னவுடன், தனது யோசனையையும் சொல்லி, அந்த காட்சியை மெருகேற்றும் மகேஷின் உற்சாகத்தையும், அவர் காட்சிகள் அமைத்து, அவற்றுக்காக எடுத்துக்கொள்ளும் மெனக்கெடல்கள் பல இயக்குநர்களை வியப்பில் ஆழ்த்தியதோடு, அவர்களையும் உற்சாகப்படுத்தும் அளவுக்கு இருக்கிறதாம். இந்த காரணத்திற்காகவே பல இயக்குநர்கள் மகேஷுடன் பணியாற்ற விரும்புகிறார்கள்.
தற்போது, பாரதிராஜா இயக்க உள்ள படத்தில் ஆக்‌ஷன் இயக்குநராக மகேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இத்துடன் மேலும் பல படங்களிலும் அவர் ஆக்‌ஷன் இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார். ‘மெட்ரோ’ படத்தை பார்த்த பாரதிராஜா, படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளைப் பார்த்து மிரண்டு விட்டாராம். உடனே, மகேஷை தேடி பிடித்து, தனது அலுவலகத்திற்கு அழைத்தவர் அவரை வெகுவாக பாராட்டியதோடு, தனது படத்திற்கும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.
மேலும், பல புதுமுக இயக்குநர்களின் படங்களுக்கு சண்டைக்காட்சிகளை அமைத்து வரும் மகேஷ், தயாரிப்பாளரின் பட்ஜெட்டுக்கும், இயக்குநரின் கற்பனைக்கும் ஏற்ப தனது அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைப்பதுடன், ஆக்‌ஷன் காட்சிகளில் பல தொழில்நுட்பங்களையும், நுணுக்கங்களையும் கற்றுத் தெரிந்தவராக இருப்பதாலே, தனது படங்களின் ஆக்‌ஷன் காட்சிகளை நுணுக்கமாக கையாள்கிறார். ‘வில் அம்பு’ படத்தில் இவர், மக்கள் நிறைந்த சாலையில் வடிவமைத்த ஆக்‌ஷன் காட்சி ஒன்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதுடன், திரையுலகினரிடையும் வரவேற்பு பெற்றுள்ளது.
அதேபோல, ‘மெட்ரோ’ படத்தில் இவர் மேற்கொண்ட சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடம் கைதட்டல் பெற்றது. மேலும், அப்படத்தின் குறிப்பிட்ட ஆக்‌ஷன் காட்சி ஒன்று மட்டும் இணையத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் மேலான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.
கார், பைக், குதிரை என்று அனைத்திலும் தனது திறமையை நிரூபித்து வந்த மகேஷ், ஆக்‌ஷன் இயக்குநராவதற்கு தூண்டுதலாக இருந்தவர் இயக்குநர் ராதா மோகன் தானாம். மகேஷ் பைட்டராக இருந்த போது, ராதா மோகனின் ‘அபியும் நானும்’ படத்திற்கு ஒரு பகுதி ஆக்‌ஷன் காட்சியை செய்துக் கொடுத்துள்ளார். அதை பார்த்த ராதா மோகன், “நீங்க ஆக்‌ஷன் இயக்குநராகலாமே, அதற்கான திறமை உங்களிடம் இருக்கிறது” என்று கூறியதுடன், தனது படத்திலேயே நான் அறிமுகப்படுத்துகிறேன்” என்றும் கூறியுள்ளார். ஆனால், சில காரணங்களால் ராதா மோகனின் படத்தில் என்னால் அறிமுகமாக முடியவில்லை, இருந்தாலும் ராதா மோகன் சார் தான் நான் ஆக்‌ஷன் இயக்குநராக காரணம், என்று கூறுகிறார் மகேஷ்.
எது எப்படியோ, தன்னை நம்பி வரும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மட்டும் இன்றி ரசிகர்களையும் தனது ஆக்‌ஷன் காட்சிகள் மூலம் நூறு சதவீதம் திருப்திபடுத்தி வரும் மகேஷ், தற்போது ‘கடிகார மனிதர்கள்’, ‘களத்தூர் கிராமம்’, பார்த்திபனின் உதவியாளர் இயக்கும் படம், பாரதிராஜா இயக்கும் படம் என்று பிஸியான ஆக்‌ஷன் இயக்குநராக வலம் வருகிறார்.

More in Interview

  • Music Director C.Sathya Interview

    எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா – 2′ போன்ற ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா. கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா. இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். எண்ணிக்கை என்ன ரொம்ப கம்மியா இருக்குன்னு நினைக்குறீங்களா? அதுக்கான பதிலையும் அவரே சொல்லிட்டாருன்னா பாருங்களேன். சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிக மெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர் தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில் இருந்து கொண்டே இருக்கிறது. உங்களுக்குள்ள நல்ல திறமை இருக்கே டக்கு டக்குன்னு அடுத்தடுத்த படங்களை புக் செஞ்சிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியது என்ற கேள்விக்கும் அற்புதமான பதிலை தருகிறார் சத்யா. நீங்க சொல்றதும் சரிதான் சார், கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் எனக்கு வந்துச்சு, படத்துல கமிட் ஆகுறது விஷயமில்ல, ஆனால் சரியான நேரத்துல பாடல்களும், பின்னணி இசையும் என்னால தர முடியுமான்னு ஒரு யோசனை வந்துட்டே இருந்தது. இதனால் பல படங்களை நான் தவிர்த்துவிட்டேன். ஆனா இனி என்னுடைய வேலையை இன்னும் வேகமாக்கியுள்ளேன். இதனால் பெரிய ஹிரோக்களின் படங்களுக்கு சரியான நேரத்தில் என்னால் அவுட்புட் தர முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் சத்யா. தற்போது விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி நடித்துக் கொண்டிருக்கும் ”பக்கா” படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பெரும்பாலான பகுதி திருவிழா செட்டப் இருப்பது போலவே இருக்கும். இதுவரைக்கும் பல கரகாட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் பார்த்திருப்பீங்க. ஆனால் பக்கா படத்தில் ஒரு கரகாட்ட பாடல் இருக்கு அது முற்றிலும் மாறுபட்ட புதுவித அனுபவத்தை தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சத்யா. இத்துடன் அசுரகுலம், பயமா இருக்கு ஆகிய படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்கிறார் மகிழ்ச்சியுடன். “பயமா இருக்கு” படத்தில் வரும் மயிலு பாடல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி முதல் முறையாக அந்தோனிதாஸ் காதல் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Movie NaveenSeptember 24, 2017
  • Puriyatha Puthir Director Ranjith Jeyakod interview

    “Puriyatha Puthir” ‘Puriyaadha Pudhir’ starring ‘Makkal Selvan’ Vijay Sethupathy, Gayathri, Mahima Nambiar and directed by debutant director Ranjith Jeyakodi, has hit...

    Movie NaveenSeptember 3, 2017
  • 12.12.1950 movie director Kabali Selvah Interview

     “12.12.1950” ’12-12-1950′ a fan biopic as described by the core team is  written, directed and acted by Kabali Selvah and is...

    Movie NaveenAugust 22, 2017
  • Director Azhagam Perumal Interview

     “Director Azhagam Perumal” One of the main factors for any movie to reach the audience effectively and become a hit is...

    Movie NaveenAugust 18, 2017
  • Dance Master Siva Rock Sankar Interview

    சிலாக்கி டும்மா டான்ஸ் விஜய் சாரின் மகனுக்கு மிகவும் பிடிக்குமாம்   – நடன இயக்குநர்  சிவ ராக் சங்கர்  Interview video Link : https://drive.google.com/file/ d/...

    Movie NaveenAugust 18, 2017
  • JSK turns as actor through Taramani

    நடிகராக அவதாரமெடுத்த தரமணி தயாரிப்பாளர் ஜேஎஸ்கே! தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவர் ஜேஎஸ்கே எனும் ஜே சதீஷ்குமார். இவரது ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பொரேஷன் ஆரோகணம் படம் மூலம்...

    Movie NaveenAugust 14, 2017
  • Stunt artist from Hollywood, Serge Crozon Cazin Interview

    “Vivegam” Action extravaganzas are a quintessential part of any international Spy thriller. Only the best of actors with valour and necessary...

    Movie NaveenAugust 6, 2017
  • Tharamani Hero Vasanth Ravi Interview

     “Taramani” Hero Vasanth Ravi For any actor the debut movie will be such a huge learning curve. And when the shooting...

    Movie NaveenAugust 2, 2017
  • Rubaai movie hero Kishore Ravichandren Interview

     மூட்டை தூக்கிய எம்.பி.ஏ பட்டதாரி   எல்லோருக்கும் தெரிந்தவர்களாலும் எல்லாம் தெரிந்தவர்களாலும் தேர்வு செய்யப் படுபவர்கள் என்றுமே தோற்பதில்லை. அப்படித்தான் ரூபாய் படத்தில் இரண்டு நாயகர்களில் ஒருவராக அறிமுகமான கிஷோர் ரவிச்சந்திரனும்....

    Movie NaveenJuly 21, 2017
Thank you for reading www.mykollywood.com
© Copyright 2016 MYKOLLYWOOD.COM

Facebook

Copyright © 2017 www.mykollywood.com

Visit Us On TwitterVisit Us On Facebook